நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதாரப்பட்டு போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். சேதாரப்பட்டு - மயிலம் சாலையில், ஒருவர் பாலித்தின் பையில், பான்மசாலா, சிகரெட், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் வைத்துக் கொண்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் நீலகிரி மாவட்டம், கோத்கிரியைச் சேர்ந்த விஜயகுமார், 45, என்பதும், அவர் புதுச்சேரியில் தங்கி குட்கா பொருட்களை வாங்கி விற்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.