/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்கா விற்றவர் காரைக்காலில் கைது
/
குட்கா விற்றவர் காரைக்காலில் கைது
ADDED : ஜூன் 04, 2025 12:18 AM
காரைக்கால் : காரைக்காலில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், நிரவி பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் நிரவி முதல் சாலையில் உள்ள ரூபி கார்டன் அருகில் சென்ற நபரை போலீசார் மடக்கி, சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த ரவி, 50, என்பதும், அவர் வைத்திருந்த கைப்பையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, ரவியை கைது செய்தனர். அவரிடம் ரூ.2,000 மதிப்புள்ள புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.