ADDED : ஜூலை 02, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பள்ளி அருகில் கடையில் குட்கா பெருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அரியூர் மெயின் ரோட்டில் உள்ள கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, ஆய்வு செய்தனர். அப்போது கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடையிவ் உரிமையாளரான அரியூர் தாமரை நகரைச் சேர்ந்த ஏழுமலை 56, மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.