நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.
அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். கடையில் இருந்து 20 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, உரிமையாளர் அரியாங்குப்பத்தை சேர்ந்த முத்துகுமரன், 44, என்பவரை கைது செய்தனர்.