ADDED : அக் 25, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில், பள்ளி அருகில் உள்ள கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அங்கிருந்த கடைகளில் ஆய்வு செய்தனர். அதேப் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், 42, என்பவரது கடையில், குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த ஹான்ஸ், கூலீப் உள்ளிட்ட ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

