ADDED : ஜன 30, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதாரப்பட்டில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மயிலம் சாலை, சேதாரப்பட்டு பஸ் நிறுத்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குள்ள கடையில் போலீசார் சோதனை செய்தனர்.
அதில் விழுப்புரம் மாவட்டம், பேராவூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், 57, என்பவரது கடையில் குட்கா பொருட்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

