ADDED : மார் 20, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒதியஞ்சாலை போலீசார் நேற்று மதியம் 2:00 மணியளவில் புதுச்சேரி ரயில் நிலையத்தில், ஹவுராவில் இருந்து வந்த ரயிலில் சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த இர்பன், 23, என்பதும், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

