sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.13 லட்சம் குட்கா பறிமுதல்; சின்னசேலம் அருகே 5 பேர் கைது

/

ரூ.13 லட்சம் குட்கா பறிமுதல்; சின்னசேலம் அருகே 5 பேர் கைது

ரூ.13 லட்சம் குட்கா பறிமுதல்; சின்னசேலம் அருகே 5 பேர் கைது

ரூ.13 லட்சம் குட்கா பறிமுதல்; சின்னசேலம் அருகே 5 பேர் கைது


ADDED : ஏப் 28, 2025 05:52 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : சின்னசேலம் அருகே, குட்கா விற்ற, 5 பேரை கைது செய்து, ரூ.13 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கீழ்க்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ஈரியூர், கொளவாய், ஏந்தல் ஆகிய கிராமங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகள் சக்தி, 45; கொளவாய் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் முருகேசன், 41; ஏந்தல், தர்மலிங்கம் மனைவி வளர்மதி 42; ஆகியோரின் மளிகை கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது.

இதுகுறித்து கீழக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்து, 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், குட்கா சப்ளை செய்தது, சேலம் மாவட்டம், ஆத்துார் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, ராயர் மகன் முத்துலிங்கம், 32; மற்றும் கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரியை சேர்ந்த சந்தானம், 56; என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீார், அவர்களிடமிருந்து, ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 630 கிலோ ஹான்ஸ், 390 கிலோ பாக்கு, 18 கிலோ கூல் லிப் உள்ளிட்ட, 1,128 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us