/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசுக்கு தண்ணி காட்டிய 'ஹேக்கர்ஸ்'
/
போலீசுக்கு தண்ணி காட்டிய 'ஹேக்கர்ஸ்'
ADDED : ஏப் 06, 2025 06:30 AM

புதுச்சேரி அரசு நிர்வாகம் முழுதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அனைத்து கோப்புகளும் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக போலீஸ் துறையும் முழுமையாக கணினி மையமாக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழக்கு விபரங்களும் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு வருகிறது. இதற்கான ஒருங்கிணைந்த சர்வர் சேவை மையம், காலாப்பட்டில் அரசு பொறியியல் பல்கலைக் கழகம் அருகே இயங்கி வருகிறது.
இந்நிலையில், போலீஸ் இணையதள சேவை இரு வாரங்களுக்கு திடீரென முடங்கியது. பதறிப்போன போலீஸ் அதிகாரிகள் மென்பொருள் வல்லுநர்களை கொண்டு, சர்வர் மையத்தில் ஆய்வு செய்தனர்.
அதில், வழக்கு கோப்புகளை திருத்தம் செய்ய சிலர் போலீஸ் சர்வரை 'ஹேக்' செய்திருப்பதை அறிந்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடன், அந்த ஹாக்கரை நீக்கிவிட்டு, யாரும் உள்ளே நுழைய முடயாத அளவிற்கு 'பைர் வால்' வைத்து பாதுகாப்பை பலப் படுத்தியதை தொடர்ந்து, 15 நாட்களுக்கு பிறகு போலீஸ் இணையதள சேவை நேற்று முன்தினம் முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

