/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணியிடம் கைப்பை திருட்டு
/
சுற்றுலா பயணியிடம் கைப்பை திருட்டு
ADDED : ஜன 19, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சுற்றுலாப் பயணியிடம் கைப்பையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவர் ஜெனிபர், 26; தனியார் வங்கி ஊழியர். இவர் தனது உறவினர்களுடன் புதுச்சேரிக்கு கடந்த 14ம் தேதி சுற்றுலா வந்தார். 15ம் தேதி மாலை 6:15 மணியளவில் புஸ்ஸி வீதியில் உள்ள தனியார் விடுதி எதிரே போட்டோ எடுப்பதற்காக தனது கைப்பையை அருகில் உள்ள பெஞ்சில் வைத்துவிட்டு, போட்டோ எடுத்தார்.
அப்போது அவரது கைப்பை மாயமாகியது. அதில் மொபைல் போன், 7 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து கைப்பையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

