ADDED : ஜூலை 11, 2025 04:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி கைவினை கலைஞர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், கடற்கரை சாலை, காந்தி திடலில், அகில இந்திய கைவினை பொருள் கண்காட்சி துவக்க விழா நடந்தது.
விழாவை மாவட்ட தொழில் மைய மேலாண் இயக்குனர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.
கூட்டுறவு சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கைவினை பொருட்கள் உதவி மைய துணை இயக்குனர் ரூப்சந்தர், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கண்காட்சியில் வைக்கப்பட்ட கைவினை பொருட்களை பார்வையிட்டனர்.
கண்காட்சியில், டெரகோட்டா சிற்பங்கள், காகித கூழ் பொம்மைகள், மரக்கலை சிற்பங்கள், கற்சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் இடம்பெற்றன. கண்காட்சியில் விற்கப்படும் பொருட்களுக்கு 15 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கைவினை சங்க செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.