/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைவினை, கைத்தறி பொருட்கள் கண்காட்சி
/
கைவினை, கைத்தறி பொருட்கள் கண்காட்சி
ADDED : டிச 07, 2025 06:46 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் காந்தி திடலில் கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சியை சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்தனர்.
மத்திய அரசு ஜவுளி அமைச்சகம் கைவினை அபிவிருத்தி ஆணைய அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில், காந்தி சில்ப் பஜார் -2025 கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை முகாம் கடற்கரை சாலை, காந்தி திடலில் உள்ள கைவினை பஜார் வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
கண்காட்சியை சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில் மதுபானி ஓவியங்கள், புல்காரி, முத்து மணி மாலைகள், தோல் காலணிகள், அப்லிக் துணி வேலைப்பாடுகள், துணி பைகள், உலோக வேலைப் பொருட்கள், கம்பளம், கண்ணாடி பொருட்கள், வெள்ளி பொருட்கள், மூங்கில் பொருட்கள், மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள், உலோக சிற்பங்கள், சுடுகளிமண் பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள் மற்றும் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வரும் 11ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட்டு, தேவையான பொருட்களை வாங்கி செல்லலாம்.

