/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பி அறுந்து விபத்து உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்
/
மின் கம்பி அறுந்து விபத்து உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்
மின் கம்பி அறுந்து விபத்து உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்
மின் கம்பி அறுந்து விபத்து உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்
ADDED : டிச 07, 2025 06:42 AM

பாகூர்: கன்னியக்கோவில் மெயின் ரோட்டில், மின் கம்பி திடீரென அறுந்து விழுந்த விபத்தில், வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கன்னியக்கோவில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையின் குறுக்காக சென்ற மின் கம்பி நேற்று மாலை 5:30 மணியளவில் திடீரென அறுந்து அவ்வழியாக சென்ற காரின் மீது விழுந்தது. கார் மின் கம்பின் மீது உரசியபடி சென்று விட்டது.
அவ்வழியாக, பைக்கில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர், சாலையின் குறுக்காக மின் கம்பி இருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்து பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பினர். தகவலறிந்த மின் துறை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு, மின் கம்பியை சீரமைத்தனர். இதனால், கன்னியக்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.