ADDED : மார் 12, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம், மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் தகவல் தொழில்நுட்ப வளத் தொகுப்பின் கீழ், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச கைக்கணினி (டேப்லெட்) வழங்கும் விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி, காராமணிக்குப்பம், ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு கைக்கணினி (டேப்லெட்) வழங்கினார்.
இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில், ஆணையர் மற்றும் கல்வித் துறைச் செயலர் ஆசிஷ் மாதவ்ராவ் மோரே, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷிணி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

