/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
/
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
ADDED : டிச 20, 2025 07:21 AM

புதுச்சேரி: அனுமன் ஜெயந்தியையொட்டி, பஞ்சவடீ ஆஞ்சநேயர் நேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி - திண்டிவனம் சாலை, பஞ்சவடீயில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. ஐந்தாம் நாளான நேற்று காலை யஜமான மகா சங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், மூலமந்திர ேஹாமம், லட்சார்ச்சனை நடந்தது.
தொடர்ந்து, 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து யாக பூஜை பூர்த்தியாகி, கடம் புறப்பட்டு, கோவிலை வலம் வந்து மகா அபிேஷகம் நடந்தது. சுவாமி அலங்காரத்திற்கு பின், 130 கிலோ ஏலக்காய் மாலை சாற்றப்பட்டு, புஷ்ப விருஷ்டி வேத கோஷம், சோடச உபசாரம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை யாழ்ப்பாணம் பாலமுருகன் மற்றும் குமரன் குழுவினரின் மங்கள இசையுடன், சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

