ADDED : டிச 12, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் 19ம் தேதி, அனுமன் நாம லட்சார்ச்சனை நடக்கிறது.
இவ்விழாவை, முன்னிட்டு, வரும் 15ம் தேதி, வெண்ணை காப்பு, 16ம் தேதி சந்தன காப்பு, 17ம் தேதி வெள்ளி கவசம், 18ம் தேதி தங்க கவசம் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான, 19ம் தேதி, அனுமன் ஜெயந்தியையொட்டி, காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மகா யக்ஞம், 7:30 மணிக்கு கடப்ரோணம் சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து, லட்சார்ச்சனை பூர்த்தி, தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து, 20ம் தேதி, மாலை விடையாற்றி உற்சவம், ராம நாம சங்கீர்த்தனம், புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

