/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மானிய விலையில் வான்கோழி வழங்கல்
/
மானிய விலையில் வான்கோழி வழங்கல்
ADDED : டிச 12, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை மூலம் மானிய விலையில் வான்கோழிகள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கால்நடைத்துறை இயக்குநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகளில் வான்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், 6 வார வான்கோழிகள் 50 சதவீத மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
ஆகையால், விவசாயிகள் மற்றும் வான்கோழி வளர்ப்போர் தங்களது பகுதியை சார்ந்த கால்நடை மருந்துவமனையை அணுகி விண்ணப்பித்து பயன்பெருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

