ADDED : பிப் 17, 2025 06:10 AM

புதுச்சேரி; திரைப்பட காட்சிகள் வாயிலாக தலைமையத்துவ பண்புகள் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் அறிவு மற்றும் தகவல் ஒத்திசைவு அமைப்பு - ஸ்கின் என்ற பெயரில் கடந்த 2020ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பில் பல்துறை நிபுணர்கள், வல்லுநர்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதன் சார்பில், அந்தந்த துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாம் அண்ணாசாலை தனியார் ஓட்டல் கருத்தரங்க அறையில் நடந்தது. நிறுவனர் ராஜா வரவேற்றார்.
இணை நிறுவனர் அருள் தலைமை தாங்கினார். தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில் எம்.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனத்தின் மனித வள ஆலோசகர் பூரணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முகாமில் கடந்த 1978ல் வெளியான தி 36-வது சேம்பர் ஆப் ஷாலின் தற்காப்பு கலை சினிமா படத்தின் முக்கிய காட்சிகள் திரைப்படப்பட்டு, தலைமையத்துவ பண்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மனித வள ஆலோசகர் பூரணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். செயல் கமிட்டி உறுப்பினர்கள் ராஜேஷ், அரிகரன், உறுப்பினர்கள் அய்யப்பன், முருகன், அருண், யுவராஜ், சுவாதி உள்பட பலர் பங்கேற்றனர்.
இணை நிறுவனர் சந்தோஷ் நன்றி கூறினார்.

