/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரம், வருவாய்த்துறை போட்டி தேர்வு தேதி அறிவிப்பு
/
சுகாதாரம், வருவாய்த்துறை போட்டி தேர்வு தேதி அறிவிப்பு
சுகாதாரம், வருவாய்த்துறை போட்டி தேர்வு தேதி அறிவிப்பு
சுகாதாரம், வருவாய்த்துறை போட்டி தேர்வு தேதி அறிவிப்பு
ADDED : ஜூலை 23, 2025 01:52 AM
புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையில் ஆட்சேர்ப்புக்கான போட்டித்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஏ.என்.எம்., மருந்தாளுநர், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர், அறுவைசிகிச்சை அரங்கு உதவியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு கடந்த 13ம் தேதி நடப்பதாக இருந்து ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நடக்கிறது.
மேலும், வருவாய்த் துறையில் துணை தாசில்தார் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு கடந்த 20ம் தேதி நடக்க இருந்தது. இந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நடக்கிறது.
போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின், ஆட்சேர்ப்பு வலைத்தளம் மேலும் புதுப்பிப்புகளுக்கு, விண்ணப்பதாரர்கள் போர்ட்டலில் வெளியிடப்படும் என, அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.