ADDED : டிச 16, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணியினை அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
இந்திரா நகர் தொகுதி, கோரிமேடு போலீஸ் வளாகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பொதுப்பணித்துறை மூலம் ரூ.26 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, அரசு கொறடா ஆறுமுகம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், துணை இயக்குநர் ஷமிமுன்னிஷாபேகம், தலைமை மருத்துவ அதிகாரி சித்ரா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் சிந்துஜா உள்ளிட்ட சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

