/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத் துறை ஒப்பந்த பணி மே 5ம் தேதி நேர்முகத் தேர்வு
/
சுகாதாரத் துறை ஒப்பந்த பணி மே 5ம் தேதி நேர்முகத் தேர்வு
சுகாதாரத் துறை ஒப்பந்த பணி மே 5ம் தேதி நேர்முகத் தேர்வு
சுகாதாரத் துறை ஒப்பந்த பணி மே 5ம் தேதி நேர்முகத் தேர்வு
ADDED : ஏப் 14, 2025 04:06 AM
புதுச்சேரி: சிறப்பு மருத்துவர் உட்பட 80 ஒப்பந்த சுகாதாரபணியிடங்களுக்கு நேர்முக தேர்வு வரும் 5ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிறப்பு டாக்டர்கள், டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். அதன்அடிப்படையில், சிறப்பு டாக்டர் உள்பட 80 பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை முடிவு செய்து, நேர்முக தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், கூறியிருப்பதாவது:
புதுச்சேரி, காரைக்காலில் பணியாற்ற 19 சிறப்பு டாக்டர்கள், டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட 40 பணியிடங்கள், மாகேவில் 5 சிறப்பு டாக்டர்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள் என, 16 பணியிடங்கள் உட்பட மொத்தமாக 80 பணியிடங்கள் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான நேர்முகத் தேர்வு புதுச்சேரி, காரைக்காலில் மே 5ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி, காரைக்கால் பணியிடங்களுக்கு சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலும், மாகேயில் பணியிடங்களுக்கு மே 12ம் தேதி மாகி துணை சுகாதார இயக்குநர் அலுவலகத்திலும் தேர்வு நடக்கிறது.
உரிய சான்றிதழ்கள், போட்டோ, குடியிருப்பு சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும். சிறப்பு டாக்டர்கள் 65 வயதுக்கு கீழும், மற்ற பணியிடங்களுக்கு 35 வயதுக்கு கீழும் இருக்க வேண்டும். சிறப்பு டாக்டருக்கு ரூ.1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

