/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் அத்துமீறி கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் அத்துமீறி கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் அத்துமீறி கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் அத்துமீறி கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 28, 2025 06:12 AM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை புறவழிச்சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சதுக்கம் வரையிலான சாலையை அகலப்படுத்தப்படாததால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதை தவிர்க்கும் பொருட்டு, அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து புதுச்சேரி நுாறடிச்சாலையை இணைக்கும் வகையில் 4.5 கி.மீ., துாரத்திற்கு புதிதாக பைபாஸ் சாலை ரூ. 30 கோடி செலவில் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், நுாறடிச்சாலையில் இருந்து அரும்பார்த்தபுரம், மணவெளி சாலை சந்திப்பு வரை உள்ள புதிய பைபாஸ் சாலையின் இருபுறமும் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும், கழிவுநீர் வாய்க்கால்களில் இருந்து அகற்றப்படும் கழிவுகளும் சாலையோரம் கொட்டிவருகின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அங்குள்ள வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிக்களுக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு ஏரிகளுக்கான நீர்வரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி அருகிலுள்ள குடியிருப்புகளில் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய பைபாஸ் சாலையோர குப்பை கழிவுகள், காற்றில் பறந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
ஆகையால், அரும்பார்த்தபுரம்- நுாறடிச்சாலை பைபாஸ் சாலையோரம் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

