/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
/
சுகாதார ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
ADDED : ஜன 10, 2026 05:30 AM

புதுச்சேரி: ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று காலை 8:00 முதல் 10:00 மணி வரை இரண்டு மணி நேரம் சுகாதார ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு, சுகாதார ஊழியர் சங்கங்களின் மத்திய கூட்டமைப்பின் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரபாத் வரவேற்றார். மத்தியக்கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார்.
துளசி பாக்கியவதி, சாந்தி, விஜயமுருகன், தனசேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்துப் பிரிவு சுகாதார ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
அரசு விதிகள் மற்றும் அரசு ஆணைகள் அடிப்படையில் நியமன விதிகள் திருத்தம் மற்றும் அரசு அறிவித்த சம்பள விகித மாற்றம், சுகாதார ஊழியர்களின் பணிக்கான அலவன்ஸ், ஊதியக்குழு அடிப்படையில் பணிக்கட்டமைப்பு அமைத்தல், பதவி உயர்வு, 20 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்தால், புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

