/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2025 06:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சம்பா கோவில் எதிரே நடந்தது.
சங்கத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகநாதன், துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், தாமோதரன், இணை செயலாளர்கள் காசிமுனியன், சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் முனுசாமி, துணை பொதுச்செயலாளர் மணிவாணன், சுகாதார சம்மேளன பொதுச்செயலாளர் ஜவஹர், நிர்வாகிகள் கிரி, சதீஷ், கலைவாணி, வெற்றிவேல், சுதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சுகாதார ஆய்வாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பதவிகளை தகுதி வாய்ந்த உதவியாளர்களை கொண்டு நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும். 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி உயர்த்திய நோயாளி கவனிப்பு படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பொருளாளர் இளையதாசன் நன்றி கூறினார்.