UPDATED : அக் 02, 2026 01:46 AM
ADDED : அக் 02, 2026 01:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி இருதய ேஷத்ரா ஹர்ட் கிளினிக்கில் இதய நோய் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் அருகில் இருதய ேஷத்ரா ஹர்ட் கிளினிக் இயங்கி வருகிறது.
இங்கு உலக இதய தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பொதுமக்களுக்கு இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், இருதய சிறப்பு மருத்துவர் அனுஷ்ராஜ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், பொதுமக்களுக்கு இதய ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, இ.சி.ஜி., எக்கோ, உள்ளிட்ட இதயம் தொடர்பான அத்தியாவசிய ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள், ஆபத்து காரணிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில் டாக்டர் அனுஷ்ராஜ் இதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய மருத்துவ ஆலோசனையை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
