/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
/
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
ADDED : ஜூலை 25, 2025 06:43 AM

புதுச்சேரி: அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில், இதய ஆரோக்கியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைபயணம் மேற்கொண்டனர்.
சென்னை வானகரத்தில் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு, இதய ஆரோக்கியம், வால்வு பராமரிப்பு மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் இதய அறுவை சிகிச்சை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, நடைபயணம் மேற்கொண்டனர். அதில், வலுவாக நட, இதயத்தை வலுவாக வைத்து கொள் என்பதை முன்னிறுத்தி நடைபயணம் சென்றனர். மேலும், ஆரோக்கியமான இதயத்தை பராமரிப்பதில் வாழ்க்கை முறையும், உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஆவடி போக்குவரத்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.