/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் கன மழை நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
/
காரைக்காலில் கன மழை நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
ADDED : நவ 29, 2024 04:10 AM

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, திருநள்ளார், கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி துவக்கியது.
தற்போது பயிர்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் பெங்கால் புயல் காரணமாக கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், இளம் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மழை நீடித்தால் சம்பா நெற்பயிர்கள் அழுகி வீணாகும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் வயலில் தேங்கிய தண்ணீரை வெளியொற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.