தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை


UPDATED : அக் 22, 2026 01:31 AM

ADDED : அக் 22, 2026 01:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 01:31 AM ADDED : அக் 22, 2026 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், புதுச்சேரியில் நேற்றிரவு தீவிர கனமழை வெளுத்து வாங்கியது.

கடந்த சில நாட்களாகவே வானில் மேகமூட்டம் காணப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் கருக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து லேசான துாறலாகத் தொடங்கிய மழை, குறுகிய நேரத்திற்குள்ளேயே பலத்த கனமழையாக மாறியது. நள்ளிரவு 12 மணி கடந்தும் மழை நின்றபாடில்லை. மேலும் தீவிரமடைந்து இடைவிடாது கொட்டித் தீர்த்தது.

இரவு முழுதும் பெய்த கனமழையால் புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் மழைநீர் வடிய வழியின்றி பெருக்கெடுத்து ஓடியது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, நெல்லித்தோப்பு, ரெயின்போ நகர் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதனால் நள்ளிரவில் அவசர தேவைகளுக்காக வெளியே சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

முறையான வடிகால் வசதிகள் இல்லாத சில தாழ்வான மற்றும் வாய்க்கால் ஒட்டிய பகுதிகளில், மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவுத் துாக்கத்தைத் துறந்து, தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் அவசரமாக ஈடுபட்டனர்.

நள்ளிரவில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை, நகரின் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைத் பாதித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இனிவரும் நாட்களிலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us