ADDED : அக் 22, 2026 05:10 PM

புதுச்சேரி: மா.கம்யூ.. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி வீதி, அமுதசுரபி எதிரே இன்று (அக்.,22) நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் மதிவாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
இதில், நிர்வாகிகள் மணிகண்டன், விஜி, விஜயக்குமார், சிவக்குமார், ஸ்டாலின், அருள், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள இலவச அரிசியை ரேஷன் கடை மூலம் வழங்கிட வேண்டும். பொது விநியோக திட்டத்தை சீரழிக்கும் டிஜிட்டல் காயின் திட்டத்தை கைவிட வேண்டும். கட்டுமான நலவாரியம் அமைப்பு சாரா சமூக பாதுகாப்பு நல வாரியம் மூலம் தீபாவளி பரிசு தொகை ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
