/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கொட்டி தீர்த்த கனமழை
/
புதுச்சேரியில் கொட்டி தீர்த்த கனமழை
ADDED : அக் 22, 2025 12:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், நேற்று பெய்த கனமழையில், நகர் மற்றும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தென்மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதிக பட்சமாக, நேற்று திருக்கனுாரில், 29 மி.மீ., புதுச்சேரியில் 17 மி.மீ., மழை பெய்தது.
கனமழையில், இ.சி.ஆர்., சாலை கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், காமராஜ் சாலை, சக்தி நகர், திருவள்ளுவர் சாலை, ராஜிவ் சந்திப்பு, இந்திரா சந்திப்பு, தேங்காய்திட்டு போன்ற பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது.
பொதுப்பணித்துறை மூலம், கடந்த ஓராண்டாக அனைத்து வாய்க்கால்களும் சீரமைக்கும் பணி நடந்து வருவதால், ஓரளவிற்கு நகர சாலைகளில் மழைநீர் வேகமாக வடிகிறது.
நகராட்சி ஆணையர் கந்தசாமி, நகரின் முக்கிய பகுதிகளான காந்தி வீதி, புஸ்சி வீதி, மிஷன் வீதி, உருளையன்பேட்டை தொகுதி குபேர் நகர், தேங்காய்த்திட்டு, நேரு நகர், நெல்லித்தோப்பு, காராமணிக்குப்பம், உப்பளம், வாணரப்பேட்டை, புதிய பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மழைக்கால முன்னெச்சரிக்கையாக, தண்ணீரை வெளியேற்ற, 10 இன்ஜின்கள், ஜே.சி.பி.,மரம் வெட்டும் இயந்திரம், எமர்ஜன்சி லைட் போன்றவைகள் ராஜ்பவன் தொகுதி, பாப்பம்மாள் கோவிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மழை தொடர்பாக,புதுச்சேரி, மேரி கட்டடத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
வியாபாரம் 'டல்' கன மழையால், பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டிலேயே முடிங்கினர்.
கடைகளில் வியாபாரம் டல் அடித்தது. கோவில்கள், சுற்றுலா இடங்களில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.