தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகர பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய தடை: கலெக்டர் உத்தரவு

நகர பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய தடை: கலெக்டர் உத்தரவு

நகர பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய தடை: கலெக்டர் உத்தரவு


ADDED : ஆக 17, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நகர பகுதியில்  காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் போக்குவரத்து காவல்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் கல்வித்துறையை சேர்ந்த முக்கிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை திட்டத்தின் செயல்பாடு மற்றும் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாமதமின்றி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். 

மேலும், நகரில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் கனரக வாகனங்கள் நகரப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் விபத்து அபாய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பொறியியல் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக, சாலை வழிக்கோடுகள் இடுதல், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்துதல், வேகத்தடை குறியீடுகள் அமைத்தல், ஆபத்தான முறையில் அமைந்துள்ள மீடியன் திறப்புகளை பாதுகாப்பான முறையில் மூடுதல் மற்றும் தேவையான இடங்களில் பாதசாரிகள் சாலையை கடக்கும் குறுக்கு வழிகளை அமைத்தல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது.

இதுதவிர, சாலையோரங்களில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துதல் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உணவு பொருட்கள், காய்கறிகளை விற்பனை செய்வது ஆகியவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us