தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாரிசுதாரர்கள் போராட்டம்

 வாரிசுதாரர்கள் போராட்டம்

 வாரிசுதாரர்கள் போராட்டம்


ADDED : பிப் 21, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் காலி பணியிடங்களில் 5 சதவீதம் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கிட வேண்டும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பணி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கருணை அடிப்படையில் ஒரு முறை தளர்வு அளித்து அனைத்து வாரிசுதாரர்களுக்கும் பணி நியமனம் செய்ய கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.

நகராட்சி வாரிசுதாரர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த ஊர்வலத்தை ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தனர். சங்கத் தலைவர் சத்தியன், பிரபு தலைமை தாங்கினர்.

ஊர்வலத்தை மிஷன் வீதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆனந்த கணபதி, கலியபெருமாள், வேளாங்கண்ணிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us