தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹேல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஹேல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஹேல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 31, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் கரடி போன்று வேடமணிந்து, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

புதுச்சேரி போக்குவரத்து தெற்கு பகுதி போலீசார்,  இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன், எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் நேற்று ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதில், கரடி போன்று வேடமணிந்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்தரி, தனியார் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us