ADDED : ஆக 31, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மொளப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி 2ம் வகுப்பு மாணவர்களுக்கான வாசித்தல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். வழக்கறிஞர் வெங்கட்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாசித்தல் திறனை பகுத்தாய்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு தலைவர் வழக்கறிஞர் புகழ் செய்திருந்தார். ஆசிரியை நித்தியா நன்றி கூறினார்.
