ADDED : ஆக 31, 2026 08:54 PM
புதுச்சேரி: மூலக்குளம், பாரதி பல்கலை பேரவை சார்பில் முப்பெரும் விழா, ஓவியப் பயிற்சி அரங்கில் நடந்தது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று, பாவலர் செந்தில்குமரனுக்கு ‘பாரதி செல்வர்’ விருது வழங்கினார்.
கடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த ஜனனி, தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த கனிஷ்மா, நெல்லித்தோப்பு இமாகுலேட் அரசு நிதி உதவி உயர்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாதவன், தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த ஸ்ரீ சாரதி ஆகியோருக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், நுால்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ஓவிய பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 28 மாணவர்களுக்கு நாராயணசாமி எம்.எல்.ஏ., பதக்கம் வழங்கி பாராட்டினார். முன்னதாக, ராஜேஸ்வரி வரவேற்றார். பேரவை நிறுவனர் பாரதிவாணர் சிவா நன்றி கூறினார்.
