/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி டி.ஐ.ஜி., பங்கேற்பு
/
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி டி.ஐ.ஜி., பங்கேற்பு
ADDED : பிப் 13, 2024 05:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி வடக்கு கிழக்கு போக்குவரத்து போலீசார் சார்பில், ஹெல்மெட் பைக் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கடற்கரை சாலையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் கொடி அசைத்து துவக்கி வைத்து, தானும் ஹெல்மெட் அணிந்து பைக் பேரணியில் பங்கேற்றார்.
எஸ்.பி.க்கள் லட்சுமி சவுன்ஜயா, பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணியில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போலீஸ், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் என 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
பைக்குகளில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பைக் பேரணி, கடற்கரை சாலை துவங்கி முத்தியால்பேட்டை, கருவடிக்குப்பம், லாஸ்பேட்டை, ராஜிவ் சிக்னல், இந்திரா சிக்னல், நெல்லித் தோப்பு, மறைமலையடிகள் சாலை வழியாக மீண்டும் கடற்கரையை அடைந்தது.