/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் பாதுகாப்பு சட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு

ADDED : ஜன 05, 2025 06:19 AM

புதுச்சேரி :  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்றார்.
புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில், மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி சன்வே ஓட்டலில் துவங்கியது.
2ம் நாளான நேற்று சட்டக்கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் ஆணைய தலைவர்களின் கடமைகள், மருத்துவ கவன குறைவு, நோயாளியிடம் மருத்துவர்கள் சம்மதம் பெறும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்து உரையாற்றினார். 'நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு நுாலை வெளியிட்டார்.
மத்திய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் சாகி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, சம்பத் எம்.எல்.ஏ., மத்திய பிரதேச சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் விஜயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.