/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
/
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
ADDED : ஏப் 27, 2025 04:48 AM

புதுச்சேரி : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நேற்று, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
அரசு முறை பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் சுதேசி பஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் புதிய குற்றவியல் நீதிமன்றங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இச்சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்த், சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி, வனவிலங்கு தலைமைக் காப்பாளர் அருள்ராஜன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

