/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய் பிரிவு அதிகாரிகள் உயர் மட்ட விளக்க கூட்டம்
/
காசநோய் பிரிவு அதிகாரிகள் உயர் மட்ட விளக்க கூட்டம்
காசநோய் பிரிவு அதிகாரிகள் உயர் மட்ட விளக்க கூட்டம்
காசநோய் பிரிவு அதிகாரிகள் உயர் மட்ட விளக்க கூட்டம்
ADDED : ஆக 29, 2025 03:19 AM

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் மத்திய காசநோய் பிரிவின் மூத்த சுகாதார அதிகாரிகளிடையே உயர் மட்ட விளக்க கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் 'காசநோய் இல்லா பாரதம்' என்னும் இலக்கை அடைவதற்கு மத்திய காசநோய் பிரிவு அதிகாரிகளால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், காசநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள், சமூக அளவிலான ஏற்பாடுகள் மற்றும் உள்ளூர் உத்திகளை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதில், மத்திய காசநோய் பிரிவு அதிகாரிகள் பல்வேறு சுகாதார மையங்கள் மற்றும் சமூக ஈடுபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் மத்திய காசநோய் பிரிவின்மூத்த சுகாதார அதிகாரிகளிடையே உயர்மட்ட விளக்க அமர்வு நடந்தது.
சுகாதாரத்துறை செயலர் ஜெயந்தகுமார் ரே, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர்.காச நோய் பிரிவு உதவி இயக்குனர் ரகுராம் ராவ், சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள், திட்ட இயக்குனர் கோவிந்தராஜன், மாநில காசநோய் பிரிவு அதிகாரி வெங்கடேஷ்,உலக சுகாதார நிறுவன ஆலோசகர் மினிட்டா ரெஜி,என் டி.எப். துணைத் தலைவர் அனில் பூர்டி, காசநோய் மருத்துவ அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காசநோய் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களிடையே சோதனை விகிதத்தை அதிகரிப்பது. எல்லா கிராமங்களையும் காசநோய் இல்லாததாக அறிவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.