/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவிலில் மட்டன், சிக்கன் வழங்கிய விவகாரம் இந்து அறநிலைய துறை அதிகாரி நேரில் ஆய்வு

ADDED : நவ 05, 2024 07:02 AM

புதுச்சேரி: கோவிலில் மட்டன், சிக்கன் வழங்கிய விவகாரத்தில் இந்து அறநிலைய துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தீபாவளி பண்டிகையொட்டி மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து கவர்னருக்கு புகார் சென்றது. இது குறித்து முழு விசாரணை நடத்த கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து இந்து அறநிலைய துறை ஆணையர் சிவசங்கரன் நேற்று, கோவிலுக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் கதவை பூட்டி கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது.
தொடர்ந்து, அக்கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து, அவற்றை மேல் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
இது குறித்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் சிவசங்கரன் கூறும்போது, கோவிலில் மட்டன், சிக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளதால் அரசு உத்தரவின்பேரில் ஆய்வு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.