/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்து அபகரிப்பு மீது சி.பி.ஐ., விசாரணை கவர்னருக்கு இந்து முன்னணி கோரிக்கை

ADDED : அக் 01, 2024 06:26 AM
புதுச்சேரி: கோவில் சொத்து அபகரிப்புகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்து முன்னணி புதுச்சேரி தலைவர் சனில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் தொடர்ந்து கோவில் சொத்துகள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலம், மனைகளாக பிரித்து போலி பட்டா மூலம் பலருக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கருவடிக்குப்பம் கோவிலுக்கு இ.சி.ஆரில் உள்ள 15,000 சதுர அடி இடம், ஏ.டி.எம், கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு முறைகேடாக குத்தகை விடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது.
பிள்ளைதோட்டம் கங்கை முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் முருங்கப்பாக்கத்தில் உள்ளது.
இந்த இடம் மனைகளாக பிரித்து முறைகேடாக விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த காலங்களிலும் பல்வேறு கோவில் சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றது. எனவே கோவில் சொத்துகள் அபகரிப்பு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.