/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார் அனுமதியை ரத்து செய்ய இந்து முன்னணி மனு
/
ரெஸ்டோ பார் அனுமதியை ரத்து செய்ய இந்து முன்னணி மனு
ரெஸ்டோ பார் அனுமதியை ரத்து செய்ய இந்து முன்னணி மனு
ரெஸ்டோ பார் அனுமதியை ரத்து செய்ய இந்து முன்னணி மனு
ADDED : நவ 12, 2024 07:57 AM
காரைக்கால்: காரைக்காலில் ரெஸ்டோ பார் அனுமதியை ரத்து செய்ய வேண்டி இந்து முன்னணி மனு அளித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி நகர தலைவர் ராஜ்குமார் சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
காரைக்கால் மாவட்டத்தில் அம்மையார் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் வருகினறனர்.
இந்நிலையில் சாராயக்கடை, கள்ளுக் கடை, மதுபான கடை, பார்கள் என அதிகம் உள்ள நிலையில் தற்போது சுமார் 8 அறைகள் உள்ள தங்கும் விடுதிகளுக்கு ரெஸ்டோ பார் அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதனால், கோவில் நகரமான காரைக்கால் தற்போது மதுபான நகராக மாறி வருகிறது. மேலும் பள்ளி, கோவில், மருத்துவக்கல்லுாரி , பெண்கள் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் அருகில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் இயங்கும் ரெஸ்டோ பார்கள் குறித்து மறு ஆய்வு செய்து அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதிதாக எந்தவித ரெஸ்டோ பார்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

