ADDED : ஜூலை 15, 2025 07:28 AM

புதுச்சேரி : புதுச்சேரி சுதேசி மில் அருகேஇந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் நாகராஜ் வரவேற்றார்.மாநில தலைவர் சனில்குமார் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலபதி, அகில பாரத விஸ்வகர்மா மகாசபா தலைவர் தங்கம், கோபாலகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில பொருளாளர் செந்தில்முருகன், மாநில துணைத் தலைவர் மணி வீரப்பன், மாநில செயலாளர் தியாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், மகாலிங்கம், ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்ட செயலாளர் முருகையன் கோரிக்கையை விளக்கி பேசினார். நகர தலைவர் குமார் நன்றி கூறினார்.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் சொத்துகளை சட்டவிரோதமாக போலிபத்திரம் மூலம் குடும்பத்தினரின் பெயரில் அபகரித்த எம்.எல்.ஏ., ஜான்குமாரிடம் இருந்து இந்து கோவில் சொத்துகளை மீட்டுதர கோரியும், அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.