தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்து மேனிபெஸ்டோ நுால் வெளியீட்டு விழா

 இந்து மேனிபெஸ்டோ நுால் வெளியீட்டு விழா

 இந்து மேனிபெஸ்டோ நுால் வெளியீட்டு விழா


ADDED : நவ 30, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக இந்து பொருளாதார அமைப்பின் சார்பில், இந்து மேனிபெஸ்டோ நுால் வெளியீட்டு விழா சற்குரு ஓட்டலில் நடந்தது.

விழாவில், சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று , புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது;

சித்தர், பாரதியார், அரவிந்தர் வாழ்ந்த புனித பூமி புதுச்சேரி. பழம் பெரும் கோவில்கள், பண்பாட்டு மரபு கொண்ட ஆன்மிக பூமி.

கடல் வாணிபம், கலை-கலாசாரம், கல்வி ஆராய்ச்சியில் புதுச்சேரிக்கு சிறப்பான இடம் உண்டு. இங்கு இந்த புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. பாரத நாட்டின் பெருமையை மரியாதையை நாம் மீட்டு எடுக்க வேண்டும்.

அதற்காக நம்முடைய பாரம்பரிய ஞானம், வேதங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் நமக்கு தந்த வாழ் வியல் சிந்தனைகளை இந்த உலகத்திற்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என, கடந்த காலத்தை யும், இன்றைய நிலையையும், எதிர்கால திசையையும் இந்த புத்தகம் காட்டுகிறது.

ஒரு தலைவன் எப்படி எல்லோருக்கும் காவலனாக இருக்க வேண்டும். ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும். ஒரு நாடு எப்படிப்பட்ட வளத்தோடு இருக்க வேண்டும்.

அதற்கான பொருளாதார உருவாக்கம், வளர்ச்சி, குடிமக்கள் பாதுகாப்பு, பெண்களுக்கான பொருமை இதை எல்லாம் வேத சூத்திரங்களில் இருந்து எடுத்து காட்டுகிறது.

நம்முடைய முன்னோர்கள், மகான்கள், ஞானிகள், மகரிஷிகள் சொன்ன கருத்துக்கள், இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் சந்திக்கும் சவால்கள், சிக்கல்களுக்குமான தீர்வு இந்து தர்மத்தில் சொல்லப்பட்டு இருப்பதை, இந்த புத்தகம் சொல்லி இருக்கிறது' என்றார்.

விழாவில் உலக இந்து பொருளாதார மன்றத்தின் நிறுவனர் சுவாமி விவேகானந்த், சபாநாயகர் செல்வம், சிவசங்கரம் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us