தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் வரலாறு

திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் வரலாறு

திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் வரலாறு


UPDATED : அக் 18, 2026 07:08 PM

ADDED : அக் 18, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 07:08 PM ADDED : அக் 18, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோலில், சனீஸ்வர பகவானுக்கு புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது.

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

புராண மரபுகளின்படி, நிடத நாட்டின் மன்னனான நளமகாராஜன், சனிபகவானின் தாக்கத்தால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். தனது மனைவி தமயந்தியை பிரிந்து பல இன்னல்களுக்கு ஆளாகிறார். பின், திருநள்ளாறு திருத்தலத்திற்கு வந்த நளமகாராஜன் இங்குள்ள தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டு, நள தீர்த்தத்தில் நீராடி, இறைவனின் அருளால் துன்பங்களிலிருந்து விடுபட்டதாக ஐதீகம்.

இதன் காரணமாகத் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில், சனிதோஷ பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது.

முற்காலத்தில் இப்பகுதி தர்ப்பைப் புற்கள் நிறைந்த வனமாக இருந்ததால், இத்தல இறைவன் தர்பாரண்யேஸ்வரர் என, அழைக்கப்படுகிறார்.

தேவாரம் மூவர் பாடிய பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி, எள்தீபம் ஏற்றி, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

சனிப்பெயர்ச்சியில் குவியும் பக்தர்கள்: சனீஸ்வர பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வான சனிப்பெயர்ச்சி, திருநள்ளாறு கோவிலில் முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவர்.

புராண காலத்தில் படைப்புத்தொழிலால் செருக்கடைந்த பிரம்மா, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு, சிருஷ்டி தொழிலை இழந்தார். பின், சிவபெருமானை வணங்கி அருள்பெற வருகை தந்த இடமே தர்பாராண்யம் என்ற இந்த இடம், தொடர்ந்து, சிருஷ்டி கர்த்தாவாக சிவபெருமான் பிரமனை நியமித்தார்.

பிரம்மனோடு, அவர் நாவில் குடிகொண்டிருக்கும் சரஸ்வதி, பிரம்மனின் வாகனமான அன்னப்பறவையும் சிவபெருமானை வணங்கி நன்மைகள் பல பெற்றனர். இதனால், இவர்களின் பெயரில் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம் என திருநள்ளாறு கோவிலை சுற்றி அமைந்துள்ளது.

சனீஸ்வர பகவானை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தடைகள் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவி, நலமும் வளமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலுக்குச் செல்வது எப்படி?

திருநள்ளாறு கோயிலுக்குக் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காரைக்கால் வழியாகச் செல்லலாம். பஸ் மூலம் காரைக்கால் சென்றடைந்து, அங்கிருந்து உள்ளூர் பஸ்கள் அல்லது ஆட்டோக்கள் மூலம் திருநள்ளாறு கோவிலை அடையலாம். காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாகக் கோவிலுக்குச் செல்லலாம்.

சனிக்கிழமைகளில் முழுநேரம் கோவில் திறந்திருக்கும். காலை 4:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவும் 9:00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us