ADDED : ஜன 19, 2026 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஜீவானந்தம் நினைவு நாளையொட்டி அரசு சார்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சாரம் அவ்வைத் திடலில் அமைந்துள்ள ஜீவானந்தம் சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், அரசு கொறடா ஆறுமுகம் எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சாய் சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதேபோல், இந்திய கம்யூ., சார்பில், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவா, அந்தோணி, மாநில குழு உறுப்பினர்கள் முருகன், மூர்த்தி, செல்வம், பெஞ்சமின், கலை இலக்கிய குழு தலைவர் சிவக்குமார், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

