/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ. 1.59 லட்சம் 'அபேஸ்'
/
5 பேரிடம் ரூ. 1.59 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 19, 2026 04:53 AM
புதுச்சேரி: 5 பேரிடம் ரூ.1.59 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடியை சேர்ந்த பெண், ஆன்லைன் இன்ஸ்டாகிராம் செயலியில் ஜோதிட விளம்பரத்தை பார்த்தார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் அவரிடம், தன்னை ஜோதிடர் என, அறிமுகப்படுத்தி கொண்டு பேசினார். தொடர்ந்து, மர்ம நபர் கேட்டதின் பேரில், 70 ஆயிரத்து 800 ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.இதேபோல், அபிஷேகபாக்கத்தை சேர்ந்த நபர் 55 ஆயிரம், வேல்ராம்பட்டு சேர்ந்த நபர் 24 ஆயிரத்து 965, உருளையன்பேட்டை சேர்ந்த பெண் 7 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் ஆயிரத்து 350, என மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 115 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

