ADDED : மார் 22, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஊர்காவல் படை வீரர் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் அவில்ராஜ், 33; டி.ஜி.பி., அலுவலகத்தில் ஊர்காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 14ம் தேதி இரவு 8:30 மணியளவில் தனது பைக்கை, கர்சன் வீதி சந்திப்பில் நிறுத்தி விட்டு சென்றார். இரவு 10:00 மணியளவில் திரும்பிவந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.