/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டுக்கடன் திருவிழா இன்று நிறைவு
/
வீட்டுக்கடன் திருவிழா இன்று நிறைவு
ADDED : பிப் 13, 2025 05:05 AM

புதுச்சேரி: ஸ்டேட் பேங்க் சார்பில், புதுச்சேரி, கடலுார், பெரம்பலுார் ஆகிய இடங்களில் நடக்கும், வீட்டுக்கடன் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஸ்டேட் பேங்க், வட்டார வணிக அலுவலகம் சார்பில், புதுச்சேரி, கடலுார், பெரம்பலுார் ஆகிய இடங்களில், வீட்டுக் கடன் திருவிழா நேற்று துவங்கியது. அதில், கலந்து கொண்ட, வாடிக்கையாளர்கள், வீட்டுக் கடன், அடமான கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தொடர்பான சந்தேகங்களுக்கு வங்கி ஊழியர்கள் விளக்கம் அளித்தனர்.
விழாவில், வாடிக்கையாளர்கள், மற்ற வங்கியில் வைத்துள்ள வீட்டுக் கடனை, சுலபமாக எஸ்.பி.ஐ., வங்கிக்கு மாற்றி கொள்ளும் வசதி உள்ளது. இரண்டாவது நாளாக, கடன் திருவிழா, இன்றுடன் நிறைவு பெறுகிறது.
வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு வீட்டுக் கடனை பெற இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு வங்கி மேலாளர் தெரிவித்தார்.

