தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனி செயலரை வெளுக்க பாய்ந்த மாண்புமிகு: புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தனி செயலரை வெளுக்க பாய்ந்த மாண்புமிகு: புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தனி செயலரை வெளுக்க பாய்ந்த மாண்புமிகு: புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு


UPDATED : அக் 24, 2026 09:17 PM

ADDED : அக் 24, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 09:17 PM ADDED : அக் 24, 2026 09:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி சட்டசபையில் மூத்த 'மாண்புமிகு'வின் தனி உதவியாளரை மாண்புமிகு ஒருவர் 'வெளுக்க' முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணி கட்சி மாண்புமிகு ஒருவர், மூத்த மாண்புமிகுவை சந்தித்து தனது தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை விடுத்தார்.

உடனே தன்னுடைய தனி செயலரை அழைத்து அந்த தொகையை வழங்க உத்தரவிட்டார். இரண்டு நாள் கழித்து அந்த கூட்டணி மாண்புமிகு தனி செயலரை சந்தித்து மூத்த மாண்புமிகு கூறிய காசோலை தயாராகி விட்டதா என கேட்டுள்ளார்.

உடனே தனி செயலர் என்னிடம் யாரும் சொல்லவில்லை என, கூலாக பதிலளித்தார். மேலும், நீங்கள் கேட்டவுடன் கொடுப்பதற்கு இங்கே எதுவுமில்லை; உங்கள் மருத்துவ செலவிற்கு நான் தான் நிவாரணம் வழங்கினேன் என, படு கெத்தாக கூறியுள்ளார்.

இதனால், கடும் கோபமான கூட்டணி மாண்புமிகு தனி செயலரை 'வெளுக்க' பாய்ந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி வெளியே அழைத்து சென்று விட்டனர். இதனால் அந்த தனி செயலர் தப்பித்து விட்டார். இந்த சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us